ஆதலினால் காதல் செய்வீர்: காதல் வந்தும் சொல்லாமல்...

Saturday, October 3, 2009

காதல் வந்தும் சொல்லாமல்...

என் இதயத்தை திருடியது -நீ
அதற்காக தனிமைச்
சிறையில்
தண்டனை பெறுவது
நானா..........


வார்த்தைகள் கூட
இதயத்தை உடைக்கும் என்று
உன்னால் அறிந்து கொண்டேன்.

உனக்கு முத்தம் கொடுத்ததும்
எனக்கு பித்து பிடிக்கிறதே
இது தான் செவ் வாய் தோஷமாநினைவில் தீயாய்
நீ...................
உருகுகிறேன் நான்
மெழுகாய்.............


உன் நினைவுப்
பூக்களீன்
நடுவில்
எறிந்துகொண்டிருக்கிறது
என் இதயம்.........


என்னை எனக்கே
பிடிக்கவில்லை
காரணம் கேட்டால்
தெரியவில்லை .........

பெளர்னமி நிலவாய் என் மனதில் உதித்தவளே..
மங்கள நாள் பார்த்து வந்து சேர்ந்துவிடு
உயிரின் முகவரியை உனக்காக மாற்றிவிட்டேன்
உயிலொன்று உன் பெயரில் வைத்துவிட்டேன் எழுதி....

அனைத்தையும் மறந்துவிடும்
முட்டாள் எனக்கு
உன்னை மறக்கும் வழிமட்டும்
தெரியவில்லை...

எதைவேண்டுமானாலும்
எடுத்துக்கொள்.....
என்னிலிருந்து..

No comments:

Post a Comment